என் வாழ்விலிருந்து விலகிப்போனவள்...
என்னில் நீங்காத நினைவுகளை மட்டும்
விட்டுவிட்டு சென்றது ஏன்? விடைத்தெரியாமல்...
என்னில் மௌனப் புன்னகை...
நினைவுகளாவது இருகின்றனவே என்று...!!!
அவளின் இனிமையான வாழ்வுக்காக இன்றும் என் நெஞ்சம்
வேண்டிக் கொண்டுதான் இருக்கின்றது.. என்ன இருந்தாலும்
நான் நேசிக்கும் இதயமல்லவா...?
Thursday, January 28, 2010
இனி எல்லாம் சுகமே..
இன்றுதான் சந்தித்தது போல் இருக்கிறது...
பல ஆண்டுகளாய் என்னுள் நீ வாழ்வதுபோல் உணர்வு...
இதை பாசமென்று பூரிப்படயவா? நட்பென்று பெருமிதம் கொள்ளவா?
என் விழி பார்வையிலிருந்து நீ காணாமல்போன சில நாட்கள்...
என் வாழ்வில் இருள் சூழ்ந்த பல ஜென்மங்கள்...
உணர்ந்தேன் காதலை... உரைத்தேன் உன்னிடம்!!!
ஏற்றுக்கொள்வாய் என எண்ணவுமில்லை... நிறைவேறுமென்று நம்பவுமில்லை...
உன் இதழில் மௌனம்.. விழிகளில் ஆயிரம் அர்த்தங்கள்!!!
வெற்றியின் உச்சத்தில் நான்... என் துணையாய் நீ....
இனி என் வாழ்வில் எல்லாம் சுகமே..

Wednesday, January 27, 2010
விடியலைத் தேடி.....
சிறகடிக்கும் மின்மினிக்கும் தெரியும் காலம் முடியப்போவது....
இங்கே உன் நினைவுகள் வந்து ரீங்காரமிட....
இன்னும் எத்தனை நாட்களுக்கு உன் நினைவுகள் என்று தெரியாமலே....
நான் மட்டும் இங்கே விட்டில் பூச்சியாய்....
விடியலைத் தேடி.....
இங்கே உன் நினைவுகள் வந்து ரீங்காரமிட....
இன்னும் எத்தனை நாட்களுக்கு உன் நினைவுகள் என்று தெரியாமலே....
நான் மட்டும் இங்கே விட்டில் பூச்சியாய்....
விடியலைத் தேடி.....
பாதை மாறுமோ???
உன் விரல் தொட்ட நிமிடம் எங்கே...???
உன் தோள் சாய்ந்த தருணம் எங்கே...???
கண்ணீரின் வழியே என் இதயம் உருக...
உன்னை சேர என் உயிரும் ஏங்க...
மீண்டும் வாழத்தான் கூடுமோ???
பிரிவும் பாதை மாறுமோ???
உன் தோள் சாய்ந்த தருணம் எங்கே...???
கண்ணீரின் வழியே என் இதயம் உருக...
உன்னை சேர என் உயிரும் ஏங்க...
மீண்டும் வாழத்தான் கூடுமோ???
பிரிவும் பாதை மாறுமோ???
தொலைதூரம் போய்விட்டாயோ...???
ரணங்களின் தடங்கள் இல்லை...
தவிப்போடு...
ஊமை வார்த்தைகளின் தொல்லை!!!
என் நினைவெல்லாம் நீ மட்டுமே...
உறக்கமில்லா இரவுகளில் உன் நினைவுகள் மட்டுமே....
தொலைதூரம் போய்விட்டாயோ???
இல்லை மீட்கும் தொலைவில் நான் இல்லையோ???
தவிப்போடு...
ஊமை வார்த்தைகளின் தொல்லை!!!
என் நினைவெல்லாம் நீ மட்டுமே...
உறக்கமில்லா இரவுகளில் உன் நினைவுகள் மட்டுமே....
தொலைதூரம் போய்விட்டாயோ???
இல்லை மீட்கும் தொலைவில் நான் இல்லையோ???
Tuesday, January 26, 2010
உன்னை இழப்பேனோ என்ற பயம் !!!
சொல்ல நினைக்கும் நிமிடங்களில் உயிருக்கு உள்ளே தயக்கம்....
சொல்ல மறக்கின்ற நிமிடங்களில் உன்னை இழந்துவிடும் பயம்...
எத்தனை முறை சொல்லி பார்த்தாலும் உயிர் உன்னை இழப்பதில்லை.....
அவள் நினைவுகள்...
வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயமும்...
நினைவுகளின் சாபங்களாய் தொடர்கிறது!!!
சப்தமே இல்லாமல் எரிகின்றது.... அவள் வாழ்ந்த இந்த இதயம்...!!!
பனித்துளியின் சிறகு கூட தீமூட்ட கற்றுக்கொண்டது...!!!
என் காதல் புத்தகத்தில்...
கருகிய வாசமே அவள் நினைவுகள்...
எரிந்துபோய் மீதமுள்ள பக்கங்களே இனி நான் வாழப்போகும் வாழ்க்கை!!!

அறியாமலே...
உணர்வுகளோடு பயணம் செய்கிறேன்....
என் விழி சிந்திய ஒரு துளி நீரில், நீ கலந்ததை அறியாமலே....
Subscribe to:
Comments (Atom)