Saturday, March 27, 2010

உன் ஞாபகம் புகைப்படமானதே....

புயலடித்து ஒய்ந்தப்பின் உதிர்ந்த இலைப்போல் உள்ளம் நொறுங்கிப்போனேன்....
உன் ஞாபகமும் புகைப்படமாய் போனதால்....

Thursday, March 25, 2010

நீயா...???

வெற்றுக் காகிதமாய் இருந்த என் இதயப் பக்கங்களில்...
பல வண்ணங்களைப் பதித்த உன் நினைவுகளைத் தந்த நீயா
இன்று அக்காகிதத்தில் ஓட்டை என்கிறாய்???

Tuesday, March 16, 2010

கண்கள்....

மூச்சு இல்லாமல் முனங்கும் புல்லாங்குழலின் உயிரோ???
என்னைக் களவாடிச் சென்ற உன் கண்கள்....

நினைவுகள்....

தொடர்ந்து வந்தாயோ மழைத் துளியாய்???
தித்திக்கும் முத்தத்துடன் நினைந்து நிற்கின்றனவே என் இதழ்கள்!!!